mahesh babu

நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

Advertisment

இப்படத்தைத் தொடர்ந்து, பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். விஜய்யின் 66ஆவது படமான இப்படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். சமீபத்தில் இப்படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.

Advertisment

இந்த நிலையில், 'தளபதி 66' படம் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மகேஷ் பாபுவின் மகள் சித்தாராவும் இயக்குநர் வம்சியின் மகள் ஆத்யாவும் இணைந்து யூடியூப் சேனல் நடத்திவருவதும், அந்த சேனலை இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக தெலுங்கு நடிகர் நானி நடிக்க உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் பரவிய நிலையில், தற்போது மகேஷ் பாபுவின் மகள் நடிக்க உள்ளதாக தகவல் பரவிவருகிறது. படக்குழு தரப்பிலிருந்து இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போதுதான் இதன் உண்மைத்தன்மை குறித்து தெரியவரும்.