Advertisment

விஜய்க்கு சவால்விட்ட மகேஷ்பாபு...

mahesh babu

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு, நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடி வந்தார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

Advertisment

இதனிடையே, தெலுங்கு திரையுலகில் பிரபலங்களுக்கு இடையே #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் அந்த சேலஞ்சை செய்யும்படி மூவரை குறிப்பிடவேண்டும். இந்த சேலஞ்சை தெலங்கானா சட்டமன்ற அமைச்சர் சந்தோஷ் என்பவர் தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்நிலையில் தனது பிறந்தநாளை மரக்கன்று நடுவதன் மூலம் கொண்டாடியுள்ளார் மகேஷ் பாபு. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “எனது பிறந்த நாளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி கிடையாது. நான் #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். இந்த சங்கிலி, எல்லைகளைக் கடந்து தொடரட்டும். இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு தரும்படி உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்கிறேன். பசுமையான உலத்தை நோக்கி ஒரு அடி. இந்த முன்னெடுப்பை செய்யும் எம்.பி. சந்தோஷ்குமாருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

actor vijay mahesh babu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe