mahesh babu

கரோனா அச்சுறுத்தலால் லாக்டவுனுக்கு முன்பாகவே சினிமா படப்பிடிப்புகள் இந்தியா முழுவதும் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனைத் தொடர்ந்து லாக்டவுன்அறிவித்தவுடன் இந்திய சினிமாத் துறை முற்றிலுமாக முடங்கியது.

Advertisment

தற்போதுதான் சினிமா பட ஷூட்டிங் மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் உள்ளிட்டவைக்கு மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. ஆனால், இன்னும் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கவில்லை.

Advertisment

இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு விளம்பர ஷூட்டிங் ஒன்றில் கலந்துகொண்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அன்னப்பூர்ணா ஸ்டுடியோவில்தான் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. விரைவில் சினிமா பட ஷூட்டிங்கில் மகேஷ் பாபு நடிக்கலாம் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.