தெலுங்கு பட உலகில் பிரின்ஸ் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் மகேஷ் பாபு. சமீபத்தில் இவர் அரசியலுக்கு வர போகிறார் என்று ஒரு வதந்தி கிளம்பியது அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisment

mahesh babu

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவிற்கு தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏராளம். இவர் தன்னுடைய திரைப்பயணத்தை குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, தற்போது தெலுங்கு சினிமாவின் உட்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.

alt="zombi" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6aa42a4f-1507-4cf2-bad7-b1eb0e4da048" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/zombi-336x150_11.jpg" />

Advertisment

அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மஹரிஷி. இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதையடுத்து அவர் ஆர்மி மேஜராக இயக்குனர் அணில் ரவிப்புடி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார்.

‘பரத் அனே நேனு’ படத்தில் அவர் முதலமைச்சராக நடித்திருந்தார். இதையடுத்து மஹரிஷி படத்திலும் சில அரசியல் பேசியிருப்பார். இதனால் அவருடைய ரசிகர்கள் மகேஷ் பாபு அரசியலில் நுழைய போகிறார் என்று ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் மகேஷ் பாபு கூடிய சீக்கிரத்தில் அரசியலுக்கு வர இருக்கிறார் என்று ஒரு வதந்தி கிளம்பியது.

alt="https://www.youtube.com/watch?v=E4ra1FQUNsY&t=1s" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f5951804-2e38-4b9c-ad20-cfbc9c945973" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Mhamuni-336x150_4.jpg" />

Advertisment

அவர் இதுகுறித்து கூறியது, “நான் செய்ய விரும்புவது நடிப்பு மட்டுமே. நான் ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது நான் வெகுதூரம் செல்ல வேண்டும் என்று நினைத்தேன், அப்போது நான் செய்ததை, செய்வதை நான் மிகவும் விரும்பினேன். நிச்சயமாக, அந்த நாட்களில் என்னுடைய நோக்கங்கள் வேறுபட்டன. பள்ளிக்கு செல்வதை நான் ஒரு வருடம் தவறவிட்டபோது, என்னுடைய அப்பா படிக்கச் சொன்னார். பின்னர் திரும்பி வந்து திரைப்படங்களில் நடிக்க சொன்னார். அதாவது, எனக்குத் தெரிந்த ஒரே விஷயம், நடிப்பு மட்டும் தான். நான் அதை மாற்ற விரும்பவில்லை”. இவ்வாறு அவர் சமீபத்திய பேட்டியில் கூறினார்.