Advertisment

மாற்றுத்திறனாளி ரசிகரின் ஆசை; விஜய்யிடம் ரெகமெண்ட் செய்த மகேந்திரன்

mahendran shared a vijay fan video

நடிகர் விஜய், தற்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

கடந்த மாதம் விஜய்யை பார்க்க வேண்டும் என ஒரு குழந்தை கோரிக்கை வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக, அந்தக் குழந்தையின் ஆசையை வீடியோ கால் மூலம் நிறைவேற்றினார் விஜய். பின்பு கடந்த 17 ஆம் தேதி விஜய்யின் வீட்டின் முன், அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என ரசிகை ஒருவர்கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். இந்த வீடியோவும் வைரலாக விஜய் அவரை சந்தித்தது போல் எந்ததகவலும் வெளியாகவில்லை.

Advertisment

இந்த நிலையில் விஜய்யை பார்க்க வேண்டும் என ஒரு மாற்றுத்திறனாளி பெட்ரோல் பங்க் ஊழியர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை விஜய்யுடன் 'மாஸ்டர்', படத்தில் நடித்த மகேந்திரன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘தான் ஒரு தீவிர விஜய் ரசிகர். அதற்கு அளவே இல்லை. ஆனால் ஒரு முறை கூட அவரை நேரில் பார்த்ததில்லை. எப்படியாச்சும் பார்த்து விட வேண்டும்’என்கிறார்.

பின்பு மகேந்திரன், "அண்ணே... உங்க தீவிரமான ரசிகர். உங்களை பார்த்தே ஆகவேண்டும் என சொல்கிறார்" எனச் சொல்கிறார். மேலும் அந்த ரசிகரின் ஃபோனின் பின்புறம் 'அன்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால் நாங்கள் கண்ட முதல் அர்த்தம் தளபதி' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதோடு அந்த வீடியோவில் விஜய்யின் ரஞ்சிதமே பாடலின் ஸ்டைலில் முத்தம் கொடுக்கிறார்.

mahendran actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe