/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mahat_0.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் மஹத் ராகவேந்திரா, விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர்ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் ‘2030’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார்.
இதனிடையே, நடிகர் மஹத் ராகவேந்திராபாலிவுட்டில் ஒரு படம் நடித்துவருகிறார். சோனாக்ஷி சின்ஹா, ஹுமா குரேஷி இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அவர்களுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் மஹத் ராகவேந்திரா நடித்துவருகிறார். இவர்பாலிவுட் சினிமாத்துறையில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். சத்ரம்ரமணி இயக்கும் இப்படத்திற்கு முதாசர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். 40 நாட்கள் லண்டனில்படப்பிடிப்பைநிறைவுசெய்த படக்குழு, தற்போது டெல்லியில் மஹத் ராகவேந்திரா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
இப்படம் தொடர்பாக நடிகர் மஹத் கூறுகையில், "எனக்கு மும்பையில் சதீஷ்சென் என்ற நண்பர் ஒருவர் இருக்கிறார். படத்தில் நடிப்பதற்காக நடிகர்களைத் தேர்வு செய்துகொண்டிருந்தமுதாசர் அஜிஸ்க்கு எனது புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அதில்எனது லுக் பிடித்துப்போக, உடனே படத்தின் இயக்குநர் சத்ரம்ரமணி ஜூம் காலில் என்னை தொடர்புகொண்டு இப்படத்தின் கதையைக் கூறினார். பின்னர் முழு கதையையும் மின்னஞ்சல் செய்த அவர், இப்படத்தில் நீங்கள்தான் நடிக்கிறீர்கள்என்றார். நானும் ஒப்புக்கொண்டேன். படத்தில் சோனாக்ஷி சின்ஹா, ஹுமா குரேஷி இருவருடனும் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பாலிவுட் சினிமா துறையில் அறிமுகமாகும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த பார்ஸி மிஷ்ரா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)