/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mahat.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் மஹத் ராகவேந்திரா, விஜய் அஜித், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர்ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் ‘2030’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தில் மஹத் ராகவேந்திராவுக்குஜோடியாக ஸ்வாதி நடிக்கிறார். ப்ளாஷ் பார்வேர்ட் (Flash forward) முறையில் கதை சொல்லும் இப்படத்தை ONSKY டெக்னாலஜி பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சம்பத் ‘2030’ படம் குறித்து கூறுகையில், “இப்படத்தின் மூலன்திரைத்துறையில்எனது பயணத்தை தொடங்குகிறேன். இயக்குநர்ஆண்ட்ரூபாண்டியன் கூறிய இப்படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது.தமிழுக்கு முற்றிலும் புதிதான ப்ளாஷ் பார்வேர்ட் (Flash forward) முறையில்கதை சொல்லும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுவருகிறது. 2020இல் தொடங்கி 2030இல் முடிவடையும் இப்படத்தின் கதைநோய்த் தொற்று காலத்தில்கார்ப்பரேட் மருத்துவ துறையின் சதிகளையும் வெளிப்படுத்தும் விதமாக உருவாகிவருகிறது. இப்படம்நடிகர் மஹத்தை முன்னணி நட்சத்திரமாக மாற்றும்.எண்ணற்ற ஆச்சரியங்கள்நிறைந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் முழுபடத்தையும் முடித்துவிட்டு உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறோம்”எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)