Advertisment

மஹத் ராகவேந்திரா நடிக்கும் 'காதலே காதலே'

mahat new movie update

மஹத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மைகதாபாத்திரங்களில் நடிக்கும் படம் 'காதலே காதலே'. இந்தப் படத்தை ஆர். பிரேம்நாத் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 25 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

படத்தைப் பற்றி இயக்குநர் ஆர். பிரேம்நாத் கூறும்போது, ​​"அனைவரின் வாழ்க்கையிலும் இளமைப் பருவத்தில் இருந்து முதுமை வரை தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக காதல் இருந்து வருகிறது. இருப்பினும், காதலில் விழுவதும் அந்தத் துணையுடன் வலுவான உறவில் இருப்பதும் காலப்போக்கில் மாறிவிட்டது. 'காதலே காதலே' தற்போதைய தலைமுறையின் வாழ்க்கை, காதல் மற்றும் உறவுகள் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தை திரையில் காண்பிக்க இருக்கிறது.

Advertisment

'சீதா ராமம்' படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் அப்படியான ஒரு இசையைத் தரவுள்ளார்" என்றார்.

mahat raghavendra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe