Skip to main content

''எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்'' - மஹத் அறிவிப்பு!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

heh

 

ஊரடங்கு நிலை ஐம்பது நாளைக் கடந்து விட்ட நிலையில், திரைப்படத் தயாரிப்பு குறித்து இன்னும் ஒரு தெளிவு பிறக்காத சூழலில், இந்தத் தொழிலே மாபெரும் நஷ்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது. அடுத்து என்ன என்ற ஊகிக்க முடியாத நிலையில், தயாரிப்பாளர்களின் நலன் கருதி நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண், ஆர்த்தி, உதயா, இட்ஸ் பிரஷாந்த் மற்றும் இயக்குனர் ஹரி ஆகியோர் தன் ஊதியத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொள்வதாகச் சமீபத்தில் அறிவித்துள்ள நிலையில் தற்போது நடிகர் மஹத் ராகவேந்திராவும் தன் சம்பளத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

“இன்றைக்கு சமூகமும் சினிமாவும் இருக்கும் சூழலில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண் போன்ற நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நானும் கடந்த பத்து வருடங்களாக இந்தத் திரையுலகில் இருந்து வருகிறேன். சில படங்களில் நடித்துள்ளேன். இன்னும் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என ஆசைப்படுகிறேன். இப்போதுதான் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கரோனா தாக்கம் காரணமாக நிலவி வரும் இந்த ஊரடங்கு சூழலில் சினிமா தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது நம்மை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தான். திரைப்பட விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கூட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மூன்று தரப்பினரும் சேர்ந்து முடிவெடுத்து, எங்களுக்கு இவ்வளவுதான் தான் கட்டுப்படியாகும், உங்களுக்கு இவ்வளவுதான் சம்பளம் கொடுக்க முடியும் என அறிக்கை வெளியிட்டார்கள் என்றால் அதற்கு ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன்..

 

10% அல்லது 20% குறைத்தாலும் பத்தாது. ஏனெனில் திரையரங்குகளுக்கு மக்கள் வர நாட்களாகும். பாதிக்கும் மேலான சுமை தயாரிப்பாளர்களுக்கு இருக்கு. போட்ட பணத்தை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்பதே பெருங்கேள்வியாக உள்ளது. இந்தச் சமயத்தில் சக கலைஞர்கள் பாதியளவாவது விட்டுக் கொடுக்க முன்வந்தால் நல்லது. என்னைப் பொருத்தவரையில் அது எத்தனை சதவீதமாக இருந்தாலும் குறைத்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். என்னைப்போல வளர்ந்துவரும் நிறைய நடிகர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன். என்றுமே ஒரு நடிகனுக்கு சம்பளத்தையும் தாண்டி நிறைய படங்கள் பண்ணனும், நிறைய கேரக்டர்களில் நடிக்கணும் ரசிகர்களை இன்னும் மகிழ்விக்கணும் என்பது தான் ஆசையாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெப் தொடரில் களமிறங்கிய மஹத் ராகவேந்திரா

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

Mahat Raghavendra starring web series

 

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் மஹத் ராகவேந்திரா, விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும், மஹத் இன்னும் இந்தி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். 

 

இதனை தொடர்ந்து நடிகர் மஹத் ராகவேந்திரா  'ஈமோஜி' எனும் வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் கதாநாயகிகளாக தேவிகா சதீஷ் மற்றும் மானசா இருவரும் நடிக்க ஆடுகளம் நரேன், வி.ஜே ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திருமண தம்பதிகள் இடையே ஏற்படும் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து 'ஈமோஜி' வெப் தொடரை சென் எஸ் ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும்  முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

சிம்பு மருத்துவமனைக்கு சென்றது ஏன்? நடிகர் மஹத் தகவல்

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

actor mahat talk about silambarasan health

 

நடிகர் சிம்பு காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிம்புவுக்கு தொற்று இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

ad

 

இந்நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட சிம்பு நலமாக உள்ளார் என சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்," நடிகர் சிம்புவுக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல் மட்டுமே, கவலைப்பட வேண்டாம் " எனத் தெரிவித்துள்ளார்.  மேலும் நடிகர் சிம்பு தற்போது நலமாக இருப்பதாகவும், வீடு திரும்பி விட்டதாகவும் கூறியுள்ளார்.