mahat about his bollywood entry movie Double XL

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் மஹத் ராகவேந்திரா.அஜித், விஜய், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களிலும் இணையதொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மஹத் ராகவேந்திரா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ஹுமா குரேஷி, சோனாக்ஷிசின்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'டபுள் எக்ஸ்எல்' (Double XL) படத்தில் நடித்துள்ளார். சத்ராம் ரமணிஇயக்கியுள்ள இப்படத்தில் ஷிகர் தவான் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படம் பற்றி மஹத் ராகவேந்திரா கூறுகையில், "எனக்கு நீண்ட காலமாக ஹிந்திப் பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது, ஆனால் இந்த ஸ்கிரிப்டைப் படித்தபோது, ​​இது எனக்கான படம் என்று தெரிந்தது. சத்ரம் ரமணிதான் எனக்கு இந்தப் படத்தைத் தந்தார். என்னை நடிக்க வைக்க நினைத்ததற்கு அவருக்கு நன்றி. எனக்குத் தெரிந்த ஒவ்வொரு ஆணும் அல்லது பெண்ணும் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் உடலைப் பற்றி வெட்கப்படுகிறார்கள். கொஞ்சம் குண்டாக இருப்பது, ஒருவரின் தோலின் நிறம், அவர்களின் உயரம் மற்றும் அவர்கள் கண்மூடித்தனமாக நம்பும் அழகு எனும் மாயை என அனைத்தையும் உலகம் பார்க்கும்படி கேள்வி கேட்கிறது இப்படம். ஒரு கதாபாத்திரத்தின் திரை நேரத்தை விட அது மக்கள் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்பதே முக்கியம். அந்த வகையில் இப்படம் எனக்கு மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும்" என்றார்.

Advertisment

இப்படத்தில் நடிகர் சிம்பு 'தாலி தாலி' என்ற பாடலைப் பாடியுள்ளார். இதன் மூலம் பாலிவுட்டில் சிம்பு பாடும் முதல் பாடல் இது. இப்பாடலை தனது நண்பர் மஹத்திற்காகப் பாடியுள்ளதாக சிம்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.