/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/257_4.jpg)
அஜய் பூபதி இயக்கத்தில் சித்தார்த், சர்வானந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மஹா சமுத்திரம்'. இப்படத்தில் அனு இம்மானுவேல் மற்றும் அதிதி ராவ் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வில்லனாக கருடா ராம் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " 'மஹா சமுத்திரம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. எட்டு வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவிற்குத் திரும்புகிறேன். 'மஹா சமுத்திரம்' விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)