‘மகாநடி’ பட நடிகருக்கு திருமணம்!

mahesh achanta

கரோனா பாதிப்பால் தேசிய ஊரடங்கு கடந்த இரண்டு மாதங்களாக அமலில் உள்ளது. அதற்கு முன்பிலிருந்தேசினிமா திரையரங்கம், மால் போன்ற பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டுவிட்டன. அதேபோல மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சியான திருமண நிகழ்ச்சி குறைந்த நபர்களை வைத்தே நடத்தப்படுகின்றன.

லாக்டவுன் காலகட்டத்தில் பலரும் எளிய முறையில் திருமணம்நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மகாநடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மகேஷ் அச்சண்டா இன்று திருமணம் செய்துள்ளார்.

ரங்கஸ்தலம், டிஸ்கோ ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்த மகேஷ் இன்று தனது சொந்த ஊரான கிழக்கு கோதாவரியில் எளிமையான முறையில் பவனி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் திருமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

corona virus
இதையும் படியுங்கள்
Subscribe