mahaan movie update out now

Advertisment

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மகான்'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படம் குறித்த அப்டேட்டை இயக்குநர் கார்த்திக் சுப்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்," மகான் படத்தின் முக்கியான அறிவிப்பு இன்று (24.1.2022) மாலை 3 மணிக்கு வெளியாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.