"காசு வந்ததும் டேஸ்ட் மாறி போச்சு...” கவனம் ஈர்க்கும் விக்ரம் பட பாடல்

mahaan movie rich song released

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மகான்’. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும்நடித்துள்ளார். மேலும்சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழு தற்போது வெளியீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படக்குழு “ரிச் ரிச்” என்ற அடுத்த பாடலை வெளியிட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் துரை வரிகளில்,ஆஃப்ரோ துரை பாடியுள்ள இப்பாடல்பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இப்படம் வரும் 10ஆம்தேதி நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

actor vikram dhruv vikram karthik subbaraj mahaan
இதையும் படியுங்கள்
Subscribe