mahaan movie poster goes viral

Advertisment

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மகான்'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் மகான் படத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது அடுத்தடுத்த கதாபாத்திரத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகை சிம்ரன் நாச்சியாகவும், முத்துக்குமார் ஞானமாகவும், சனந்த் ராக்கியாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைத்தளங்கில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இப்படம் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.