Advertisment

'மகான்' ஆக மாறிய சியான் விக்ரம்! வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

etegewgtw

Advertisment

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'சியான் 60'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் த்ருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது.

இதையடுத்து மீண்டும் இயல்புநிலை திரும்பத் தொடங்கியதும் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, சமீபத்தில் படப்பிடிப்பை நிறைவுசெய்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளுக்காக படக்குழு ஆயத்தமாகிவரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக சில தினங்களுக்கு முன் படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ''மகான்'' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைபெற்று வைரலாகி வருகிறது.

karthik subbaraj actor vikram mahaan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe