Published on 26/12/2018 | Edited on 26/12/2018

ஹன்சிகாவின் 50வது படமான 'மஹா' படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அதில் ஹன்சிகா சில சாமியார்களுடன் அமர்ந்து ருத்ராட்ச மாலை அணிந்து காவி உடையில் கஞ்சா புகைத்தது சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இதையடுத்து ஹன்சிகா மற்றும் படத்தின் இயக்குநர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் 'மஹா' படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரின் பின்னணியில் மசூதி இருக்கும்படியும், ஹன்சிகா தொழுவது போலவும், பின்னால் நிழல் உருவத்தில் துப்பாக்கியுடன் ஹன்சிகாவின் உருவம் இருப்பது போன்றும் காட்சி உள்ளது. தற்போது இந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது. யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.