நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான 'மஹா' படத்தின் முக்கிய அப்டேட்

maha movie first song update out now

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு 'மாநாடு' படத்தில் நடித்திருந்தார். கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனிடையேநடிகர் சிம்பு, இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது நடிகை ஹன்சிகாவின் 50வது படமாகும்.எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கரோனாபரவலால் ‘மஹா’ படத்தின் இறுதிக்கட்ட பணியில்தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், கரோனாபரவல் தற்போது குறைந்துள்ளதால் மீண்டும் இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவரும் படக்குழு,'மஹா' படத்தின்பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘மஹா’ படத்தின் முதல் பாடல் டிசம்பர் 4ஆம்தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் குறித்த தகவல் வெளியகியுள்ளதால்ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

actor simbu Hansika Motwani maha
இதையும் படியுங்கள்
Subscribe