Advertisment

ஹன்சிகா நடிக்கும் 'மஹா' பட தலைப்பிற்கு இது தான் அர்த்தம் !

maha

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'மஹா'. ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் வி.மதியழகன் பேசியபோது...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

''Magnetizing, Alluring, Hidden & Aggressive' ஆகியவை இந்த 'MAHA' படத்தின் தலைப்பின் முதல் எழுத்துக்களை குறிப்பவை மட்டுமல்ல, படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களில் ஹன்சிகாவின் அவதாரங்களை ஒத்ததாகவும் இருக்கிறது. ஒரு தயாரிப்பாளராக மிகக் கடுமையாக பணிபுரியும் இந்த குழுவை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். ஒரு தயாரிப்பாளரை ஊக்கப்படுத்தும் முதல் விஷயம், படக்குழுவினர் சொன்ன தேதிக்குள் முடித்துக் கொடுக்கும் போது தான். இயக்குனர் ஜமீல், ஹன்சிகா மோத்வானி, ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் மற்றும் குழுவில் உள்ள அனைவரின் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

வழக்கமாக சினிமாவில், திறமையான கலைஞர்களை இயக்குநரின் நடிகர், தயாரிப்பாளரின் இயக்குனர் என்ற அடைமொழியுடன் குறிப்பிடுவார்கள். ஆனால் நான் தொடர்ந்து பெரும் பொறுப்புடன் செயல்படும் ஒரு தயாரிப்பாளரின் குழுவைக் கொண்டிருக்கிறேன் என கருதுகிறேன். இது எனக்கு ஒரு நேர்மறையான உணர்வைத் தருகிறது. இப்போதே எனக்கு படத்தின் தரம் கண் முன்னால் தெரிகிறது" என்றார். தயாரிப்பாளர் மதியழகன் வெவ்வேறு நிலைகளில் உருவாகி வரும், நயன்தாராவின் கொலையுதிர் காலம், அருண் விஜய் நடிக்கும் 'பாக்ஸர்' என நல்ல தரமான படங்களை தயாரித்து வருகிறார்.

hansika maha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe