Advertisment

அனகாவை காதலிக்கும் கௌரி கிஷன்; இணையத்தில் ட்ரெண்டாகும் 'மகிழினி' பாடல் 

Magizhini song goes viral on social media

‘நட்பே துணை’ படத்தின் மூலம்தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் அனகா. சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலோனா’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ‘காதல் மன்னன்னா..’ பாடலுக்கு இவர் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில்பெரிதும் பேசப்பட்டது.

Advertisment

இந்நிலையில்நடிகை அனகாவும், ‘96’ படத்தில் நடித்த கௌரி கிஷனும் இணைந்து, ஓரின சேர்க்கையாளருக்குஆதரவாக உருவாகியுள்ள 'மகிழினி' என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளனர். இப்பாடலை ‘கோப்ரா’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிவரும் பாலசுப்பிரமணியன் இயக்கியுள்ளார். இதில், தன்பால் ஈர்ப்புகொண்ட இரு பெண்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வதைதம் பெற்றோருக்கு உணர்த்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மதன் கார்க்கி வரிகளில், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1e24cfa6-1504-45b4-9d31-6ff3b71327e0" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_29.jpg" />

மேலும், ‘மகிழினி’ இசை ஆல்பம் குறித்துஇயக்குநர் கூறுகையில், "ஓரின சேர்க்கையாளர்களைப் பற்றி சமுதாயத்திற்குப் புரியவைக்க வேண்டும் என்பதுதான் ‘மகிழினி’யின் பின்னணியின் எண்ணமாகும்" என தெரிவித்துள்ளார். ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்பாடல், யூடியூப் தளத்தில் 9 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Magizhini gowri g kishan anagha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe