பிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

Advertisment

vijay

டெல்லியில் பிரபல கல்லூரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங் முடிவடைந்தவுடன் கர்நாடகாவில் உள்ள சிக்மகளூர் பகுதியில் ஜெயில் செட் போட்டு அங்கு விஜய் சேதுபதி, விஜய் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சி, விஜய் சேதுபதி அறிமுக காட்சிகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியான பின்பு விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு பலரிடம் இருக்கையில், தடம் படத்தை இயக்கிய இயக்குனர் மகிழ்திருமேனி தளபதி 65 படத்தை இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

முன்னதாக இயக்குனர் மோகன்ராஜா, ஷங்கர், கார்த்திக் நரேன் உள்ளிட்டோர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார்கள் என்று சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வந்தநிலையில் மகிழ்திருமேனி அந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார். தற்போது இந்த செய்தி வைரலாகி வரும் நிலையில் ட்விட்டரில் தளபதி 65 என்ற ஹேஸ்டேக் இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Vijayan