Skip to main content

இசைஞானியின் பாராட்டில் இசைவாணி...

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

ilaiyaraja

 

 

இயக்குனர் பா. ரஞ்சித்தின் ஆதரவோடு  உருவாக்கப்பட்ட இசைக்குழு, கேஸ்ட்லெஸ் கலக்ட்டிவ். சென்னையின் இசையான கானாவை, ராக், ரேப்போடு கலந்து புதுவிதமான இசையை தருகிறது இந்த இசைக்குழு. சமூக கொடுமைகளுக்கு எதிரான புரட்சி குரல்களே இந்த குழுவின் அடையாளம்.

 

பிபிசி ஊடகம் வருடந்தோறும், உலகின் டாப் 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள, 2020 ஆம் ஆண்டுக்காண பிபிசி-யின் டாப் 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார் கேஸ்ட்லெஸ் கலக்ட்டிவ் குழுவின் பாடகர் இசைவாணி. 

 

டாப் 100 பெண்கள் பட்டியலை வெளியிட்ட பிபிசி, பட்டியலில் இருக்கும் ஒவ்வொருவரையும் தேர்வு செய்ததற்கான காரணத்தையும் கூறியுள்ளது. அதில், "தமிழகத்தில் வடசென்னையின் உழைக்கும் மக்களிடமிருந்து உருவானது கானா இசை. இசைவாணி, அந்த கானா இசையின் தனித்துவமான பாடகர். ஆண் ஆதிக்கமிக்க இந்தத் துறையில், பல வருடங்களாக பாடி வருகிறார் இசைவாணி. பிரபலமான ஆண் பாடகர்களோடு, ஒரே மேடையில் பாடுவதே சாதனையாக கருதப்படுகிறது. இசைவாணி, வெற்றிகரமாக பழைய சம்பிரதாயங்களை உடைத்துள்ளார். அது மற்ற இளம் பெண் கானா பாடகர்களை, பாட முன்வர வைத்துள்ளது" என  இசைவாணிக்கு புகழாரம் சூட்டியது. இதன்பின் பலரும் இசைவாணிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். 
 

இந்நிலையில், இசைஞானி இளையராஜா இசைவாணியை நேரில் அழைத்து தன்னுடைய பாராட்டினை தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மோடியே முன்வந்து இளையராஜாவை நியமித்திருக்கிறார்... அதனால் தமிழ்நாட்டில்..." - கவிஞர் முத்துலிங்கம்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

muthulingam speech at sivaji ganesan book release function

 

நடிகர் சிவாஜி கணேசன் குறித்து மருது மோகன் என்பவர் 'சிவாஜி கணேசன்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(18.12.2022) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவாஜிக்கு நெருக்கமானவர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா  'சிவாஜி கணேசன்' புத்தகத்தை வெளியிட, சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

 

நிகழ்ச்சியில் பேசிய முத்துலிங்கம், "ஒரு நடிகரைப் பற்றி இவ்வளவு ஆய்வு செய்து 1600 பக்கங்களில் ஒரு புத்தகத்தை எழுதியவர் இந்தியத் துணைக் கண்டத்தில் உலக வரலாற்றில் எவரும் கிடையாது மருது மோகன் மட்டும்தான்.  இந்த விழாவிற்கு இளையராஜாவை அழைக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார் மருது மோகன். அதற்காக மூன்று மாதம் காத்திருந்து இளையராஜாவிடம் தேதியைப் பெற்றிருக்கிறார். 

 

சிவாஜி பற்றி எல்லாருக்கும் தெரியும். தமிழ் சிறந்த மொழி என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டும் என்றால் சிவாஜி படத்தைத் திரையிட்டுக் காண்பித்தால் போதும். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்குக் கிடைத்த பெருமை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. மத்திய அரசே, அதாவது மோடியே முன்வந்து மாநிலங்களவை உறுப்பினராகச் சேர்த்திருக்கிறார். இதை விட வேறு என்ன சிறப்பு வேண்டும். இதற்காகவே மோடி அவர்களை நான் பாராட்டுகிறேன். மத்திய அரசையும் போற்றுகிறேன். 

 

அதே நேரத்தில் மொழிக் கொள்கை என்று வரும்போது, என்னதான் செய்தாலும் திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்றிருக்கிற காலம் வரையிலும் தாமரை கட்சி தமிழ்நாட்டில் தலை நிமிர முடியாது என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டத்தை வழங்கியவர் கலைஞர்தான்." என்றார். மேலும் தொடர்ந்து இளையராஜாவைப் பற்றிப் புகழ்ந்து தள்ளினார் கவிஞர் முத்துலிங்கம். 

 

 

Next Story

23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் எவர்க்ரீன் கூட்டணி

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

after 23 years ilaiyaraja composing music for ramarajan movie samaniyan

 

80களில் 'எங்க ஊரு காவல்காரன்', 'கரகாட்டக்காரன்', 'தங்கமான ராசா' என பல ஹிட் படங்களைக் கொடுத்து டாப் ஹீரோவாக வலம் வந்தவர் ராமராஜன். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிய ராமராஜன் தற்போது 'சாமானியன்' படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்தை ராகேஷ் இயக்க ராதாரவி மற்றும் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மதியழகன் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. 

 

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராமராஜன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இது தொடர்பாக இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளது படக்குழு. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

இவர்கள் கூட்டணியில் வெளியான 'செண்பகமே...செண்பகமே', 'சொர்கமே என்றாலும்...', 'மதுர மரிக்கொழுந்து...' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் உள்ளது. அதிலும் சில பாடல்கள் ராமராஜன் குரலுக்கு இளையராஜாவின் குரல் அப்படியே பொருந்தியிருக்கும். இப்படி நீங்கா நினைவுகளாகப் பல பாடல்களைத் தந்த இந்த எவர் க்ரீன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.