Advertisment

நீங்களாம் தளபதியைப் பத்தி தப்பா பேசலாமா? மதுரை ஆதீனத்திற்கு எதிராக களமிறங்கிய விஜய் ரசிகர்கள் 

Madurai Vijay fans condemning Madurai Aadeen talk about vijay film

மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் அண்மையில் விஸ்வ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மதுரை ஆதீனம், ''சமீபத்தில் தொலைக்காட்சியில் படம் ஒன்றை பார்த்தேன். விஜய்னு ஒரு நடிகர் நடிச்ச படம். அதில் அந்த நடிகர் சொல்கிறார் ''புள்ளையாரே... புள்ளையாரே... உனக்கு பூ சாத்துனா செடி அழுகுது. என் காதலிக்கு சாத்துனா செடி சிரிக்குதுனு' சொல்றாரு. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் அப்படி சொல்லுவாரு. அவர் படத்தை பார்க்காதீங்க. இப்படி நமது கடவுளை இழிவுபடுத்துகிறார்கள். இதை சொன்னால் என்னை சங்கினு சொல்கிறார்கள்" என்றார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் பலரும் கண்டனம்தெரிவித்தனர். இதற்குஒரு படி மேலே சென்றமதுரையைசேர்ந்த விஜய் ரசிகர்கள் ஆதீனத்துக்கு எதிராக போஸ்டர் அடுத்து தங்களதுகண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகமதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் "எச்சரிக்கை, மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா? "வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி, மதம் ஏதுமில்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை" என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை சீண்டும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisment

actor vijay madurai aathinam vijay fans
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe