மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'. கே.சி. பாலசாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க கடந்த 6ஆம் தேதி வெளியாகியது.
மிடில் கிளாஸ் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. படத்திற்கு லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இபப்டத்தின் ஓ.டி.டி. அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புது போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.