/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/142_29.jpg)
ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப்பான். இப்படம் கார்த்தியின் 25வது படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் நாளை (10.11.2023) வெளியாகவுள்ளது.
இப்படத்தை சட்ட விரோதமாக 1077 இணையதளங்களில் வெளியிடுவதைத்தடுக்க உத்தரவிடக் கோரி படக்குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இப்படம் இணையதளங்களில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)