
பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி மலையாளம், தமிழ் என இரு படஉலகிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து கொண்டிருக்கும் நடிகை மடோனா செபஸ்டியன் அடுத்ததாக கன்னட சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார். நடிகர் சுதீப் திரைக்கதை எழுதி நடித்த 'கொட்டிகொபா' படத்தின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதையடுத்து இதன் மூன்றாம் பாகத்துக்கும் திரைக்கதை எழுதி நடித்து வருகிறார் சுதீப். அறிமுக இயக்குனர் சிவகார்த்திக் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதமே தொடங்கி நடைபெற்றது. ஆனால் கதாநாயகி யார் என்பது மட்டும் முடிவாகாமல் இருந்த நிலையில் தற்போது மடோனா செபாஸ்டின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். வரும் 17ஆம் தேதி முதல் செர்பியாவின் தலைநகர் பெல்கிரேட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் மடோனா கலந்துகொள்ளவிருக்கிறார். மேலும் தொடர்ந்து நாற்பது நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு அங்கு நடைபெறவுள்ளது.