/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/132_33.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். அண்மையில் இப்படத்தின் பாடல் காட்சி பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
அண்மையில் பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித், லியோ படத்தில் இணைந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் இப்படத்தில் இணைந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படம் மூலம் பிரபலமான மடோனா செபாஸ்டியன், தமிழில் 'காதலும் கடந்து போகும்' படம் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 'கவண்', 'ப.பாண்டி', 'ஜூங்கா' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சசிகுமார் நடிப்பில் வெளியான 'கொம்புவச்ச சிங்கம்டா' படத்தில் நடித்திருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)