லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும் இந்தாண்டில் முதல் நாளில் உலகளவில் அதிக வசூலை ஈட்டிய இந்திய திரைப்படமாக லியோ சாதனை படைத்துள்ளதாகக் கூறியது. இந்தச் சாதனையை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தில் நடித்த மடோனா செபாஸ்டியன், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "லியோவுக்கு கொடுத்த அமோக வரவேற்பிற்கு நன்றி. அற்புதமான அனுபவம்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.