Madhya Pradesh Home Minister Narottam Mishra's letter to Prabhas Adipurush film crew

Advertisment

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, இப்படத்தில் அனுமன் குறித்து சர்ச்சை காட்சி இருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்குமாறு இப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஓம் ராவத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அனுமன் சம்மந்தப்பட்ட காட்சி மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அக்காட்சிகளை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.