Advertisment

‘அதற்காக இப்படி செய்தேன்’- தற்கொலை முயற்சி குறித்து மதுமிதா

பிக் பாஸ் வீட்டில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப்பின்னர் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. விதிகளை மீறிவிட்டதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

Advertisment

madhumitha

நடிகர் கவின், சாக்‌ஷி - அபிராமி - லாஸ்லியா - ஷெரின் ஆகிய 4 பேரையும் லவ் பண்ணுவதாக தெரிவித்தார். இது ஜாலியாக தான் சொன்னதாக கவின் சொன்னாலும், சாக்‌ஷியும், அபிராமியும் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறி, இந்த விவகாரத்தை பெரிய பிரச்சனையாக கொண்டு சென்றார் மதுமிதா. இதனால், பிக்பாஸ் வீட்டில் பல போட்டியாளார்களினால் ஒதுக்கப்படும் நிலைக்கு வந்துள்ள கட்டத்தில், முன்தின இரவில் மணிக்கட்டை வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைப்பின்னர் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. விதிகளை மீறிவிட்டதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன என்று தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசியவர், “நான் தைரியமான பெண் என்று எல்லாருக்கும் தெரியும். என் தைரியம் எந்த அளவுக்கு சோதிக்கப்பட்டிருந்தால் இந்தவொரு முடிவுக்கு வந்திருப்பேன். இதுகுறித்த காட்சிகளில் ஒளிப்பரப்பலாமா அல்லது வேண்டாமா என்பதை அவர்கள் முடிவு செய்யட்டும். நான் என் கருத்தை நான் அங்கு வெளிப்படுத்தினேன். என்னை எவ்வளவு இழிவாக, கீழ்தரமாக பேச முடியுமோ அவ்வளவு பேசி என்னை முட்டாள், கேப்டன்சிக்கு தகுதி இல்லாதவள், நான் இருந்தால் நாங்கள் இருக்கமாட்டோம் என பேசிய போது, யார் முட்டாள் என தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதற்காக இப்படி செய்தேன்," என்றார்.

உள்ளே நடந்த விவாதங்களை சேரனும், கஸ்தூரியும் தடுத்த நிறுத்த சிரமப்பட்டதாகவும் மதுமிதா கூறினார்.

bigg boss 3
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe