தங்கம் வென்ற மாதவன் மகன் - டி-ஷர்ட் வழங்கி முதல்வர் வாழ்த்து

Madhavan's son  won the gold - congratulated by the odisha Chief Minister with a t-shirt

மாதவன் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே மாதவனின் மகன் வேதாந்த் மாதவன்,நீச்சல் போட்டிகளில் தொடர்ந்து பல பதக்கங்களைக் குவித்து வருகிறார். அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற 48-வது ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். மேலும் வேதாந்த் மாதவன் தேசிய ஜூனியர் சாதனையையும் முறியடித்துள்ளார்.

இந்நிலையில் மாதவன் தனது குடும்பத்தினருடன் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பகிர்ந்து, "மாண்புமிகு ஒடிசா முதல்வரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய நாட்டின் சிறந்த விளையாட்டு தளமாக ஒடிசா மாநிலத்தை உருவாக்க நீங்கள் முன்னெடுத்துள்ள முயற்சிக்கு நன்றி. விளையாட்டின் எதிர்காலத்திற்காக நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கிறது. உங்கள் அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த சந்திப்பின் போது முதல்வர் நவீன் பட்நாயக் டி-ஷர்ட் ஒன்றை வேதாந்த் மாதவனுக்கு பரிசாக வழங்கி வாழ்த்தியுள்ளார்.

Madhavan
இதையும் படியுங்கள்
Subscribe