Advertisment

நடிகர் மாதவனின் மகன் தேசிய அளவில் பதக்கங்கள் வென்று சாதனை...

நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்ரன் அவருக்கு ஜோடியாக நடிக்க, இது தமிழ், மலையாளம், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது இப்படம்.

Advertisment

madhavan

இந்நிலையில் மாதவனின் மகன் தேசிய நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளாதக மாதவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நீச்சல் போட்டியில் சிறுவயதிலிருந்தே ஆர்வம் கொண்டிருந்த மாதவனின் மகன் வேதாந்த். முன்னதாக தாய்லாந்தில் நடந்த ஃப்ரீ ஸ்டல் நீச்சல் போட்டியில் வெண்கலப் பதகத்தை வென்றிருந்தார். தற்போது, தேசிய அளவில் நடந்த் நீச்சல் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்ததாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகியுள்ளார்.

Advertisment

இது குறித்து ட்விட்டரில் மாதவன், "உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன், நல்வாழ்த்துகளுடன், கடவுளின் கிருபையுடன் வேதாந்த் மீண்டும் எங்களை பெருமைப்படுத்தியுள்ளான். ஜூனியர் தேசிய நீச்சல் போட்டியில் 3 தங்கங்கள், ஒரு வெள்ளி. அவனது முதல் தனி தேசியப் பதக்கங்கள். அடுத்தது ஆசியப் போட்டிகள். மும்பை க்ளென்மார்க் ஃபவுண்டேஷனுக்கு நன்றி. அனைத்துப் பயிற்சியாளர்கள் மற்றும் அணி உறுப்பினர்களுக்கு நன்றி" என்று பகிர்ந்துள்ளார்.

Madhavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe