
'இறுதிசுற்று' படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்த நடிகர் மாதவன் அடுத்ததாக நடித்த விக்ரம் வேதா வெற்றி பெற்றதையொட்டி அவரது மார்க்கெட் மீண்டும் உச்சத்திற்கு சென்றது. இந்நிலையில் சமீபத்தில் சயீப் அலிகானுடன் இந்தி படமொன்றில் நடிக்க இருந்த மாதவன் தோள்பட்டை காயம் காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அந்த காயத்திற்காக மாதவன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. வேகமாக குணமடைந்து வரும் அவர் அடுத்ததாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கைப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஆனந்த் மகாதேவன் இயக்க இருக்கிறார். இந்த படம் நம்பி நாராயணனின் பிரபல புத்தகமான 'ரெடி டூ ஃபயர்: ஹவ் இந்தியா அண்ட் ஐ சர்வைவ்டு த இஸ்ரோ ஸ்பை கேஸ்' (Ready to Fire: How India and I Survived the ISRO Spy Case) புத்தகத்தை தழுவி உருவாக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.