Advertisment

காலி விமானத்தில் துபாய்க்கு தனியாகப் பயணித்த மாதவன்!

bdxbxb

நடிகர் மாதவன் தற்போது 'அமெரிகி பண்டிட்' பண்டிட் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் மாதவன் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி துபாய்க்கு பயணித்துள்ளார். விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய நடிகர் மாதவன் ஒரு பயணிகூட இல்லாத தனி விமானத்தில் துபாய்க்கு பறந்துள்ளார்.

Advertisment

கரோனா காரணமாக துபாய்க்குப் பயணப்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ் வேண்டும், கோவிட் பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதியாக வேண்டும். இவை எல்லாம் இருக்கும்பட்சத்தில் துபாய்க்கு செல்ல அனுமதி கிடைக்கும் என்ற சூழ்நிலை தற்போது நிலவி வருவதால் அந்நாட்டிற்கான விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. இதன் காரணமாகவே மாதவன் சென்ற அந்த விமானத்திலும் யாரும் பயணிக்கவில்லை. இதனால் நடிகர் மாதவன் காலி இருக்கைகள் நிறைந்த அந்த விமானத்தில் தனியாகப் பயணித்துள்ளார். மேலும், அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், இந்த சூழல் வேடிக்கையாகவும், அதேசமயம் சோகமாகவும் இருக்கிறது. அன்பு மிக்கவர்கள் ஒருவருக்கொருவர் சேர்ந்திருக்க, இந்தச் சூழல் முடியவேண்டும் என்று கடுமையாகப் பிரார்த்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Advertisment

Madhavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe