madhavan talk about surya

தமிழ் மற்றும் இந்திசினிமாவில்கவனம் செலுத்தி வரும் மாதவன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் 'ராக்கெட்ரி- நம்பி விளைவு'. இந்த படம்இஸ்ரோவில்பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரமான நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 1-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம்வெளியீட்டிற்குசில நாட்களே உள்ள நிலையில்ப்ரோமோஷன்பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'ராக்கெட்ரி- நம்பி விளைவு' படக்குழுவினர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர். இதில் கலந்து கொண்டு மாதவன் செய்தியாளர்களின் பலகேள்விகளுக்குப்பதிலளித்தார். அப்போது நிருபர் ஒருவர் இப்படத்தில் சூர்யா ஷாருக்கான் கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு மாதவன், இப்படத்தில் சூர்யா, ஷாருக்கான் அவர்களாகவே நடித்துள்ளனர். முதலில் இந்த கதையை எழுதும் பொழுது சூர்யா, ஷாருக்கான் உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. முதலில் இந்த கதையை சூர்யாவிடம் சொல்லிய போது நல்ல கதையாகஇருக்கு, நல்லாபண்ணுயான்னுசொன்னார். இதே போல ஷாருக்கானிடம் இந்தகதையைக்கூறினேன்.இதைக்கேட்ட அவர் கதை நல்லாஇருக்குகண்டிப்பா நான் இந்த படத்தில் ஒரு சின்னரோலாவதுபண்ணுவேன். அப்படி இல்லையென்றால் படத்தில் பின்னாடியாவது உக்கார வாய்ப்புகொடுன்னுசொன்னார். இதை நான் சூர்யாகிட்டசொன்னேன். உடனே அவரும் ஷாருக்கானேபன்றாருநானும் இந்த படத்தில் நடிப்பேன் என்றார். அப்படிதான் இவர்கள் இருவரும் இந்த கதைக்குள் வந்தனர். ஆனால் இருவரும் இப்படத்தில் நடித்ததற்காக ஒரு பைசா கூட வாங்கவில்லை" என்றார்.