Advertisment

அரசியல் தலைவரின் பயோ பிக் - படக்குழுவுடன் இணைந்த மாதவன்

Madhavan joins Akshay Kumar C Sankaran Nair Biopic

தமிழ்மற்றும் இந்தியில் பல படங்களிலும், ஆங்கிலத்தில் சில படங்களிலும் நடித்துள்ள மாதவன் முதல் முறையாக 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் கடந்த வருடம் வெளியாகி பலரதுவரவேற்பைப் பெற்றது.

Advertisment

மேலும் சர்வதேச அரங்கில் பல பாராட்டுகளையும் பெற்றது. அதோடு தற்போது ஆஸ்கர் விருதுக்குத்தகுதியான 301 திரைப்படங்கள் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தப் படமும் இடம்பெற்றது.'ராக்கெட்ரி' படத்தைத்தொடர்ந்து இந்தியில் 'தோகா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இந்த நிலையில்மற்றொரு இந்திப் படத்தில் தற்போது மாதவன் இணைந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் குறிப்பிட்ட காலத்திற்குத்தலைவராக இருந்த வக்கீல் சி.சங்கரன் நாயரின்வாழ்க்கையை கரன் சிங் இயக்கி வருகிறார். இதில் சங்கரன் கதாபாத்திரத்தில் அக்சஷய் குமார் நடிக்ககதாநாயகியாக அனன்யா பாண்டே நடிக்க படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் மாதவன் தற்போது இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக 1920களில் இருக்கும் நீதிமன்றம் போல் செட் அமைக்கப்பட்டு அதில் மாதவன் சம்பந்தப்பட்டகாட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறதாம்.

akshay kumar biopic Bollywood Madhavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe