Madhavan Hisaab Barabar to world premiere in iffi

கோவாவில் ஆண்டு தோறும் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தாண்டும் வருகிற 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த விழாவில் மாதவன் நடிப்பில் உருவாகி இன்னும் திரைக்கு வராமல் இருக்கும் ஹிஸாப் பராபர் படம் வருகிற 26ஆம் தேதி திரையிடப்பட இருக்கிறது.

இப்படம் ஒரு கார்ப்பரேட் வங்கியின் பில்லியன் டாலர் மோசடியை ஒரு சாதாரண மனிதன் அம்பலப்படுத்த எந்தளவிற்கு முயற்சிக்கிறார் என்பதை பற்றி பேசுகிறது. இப்படத்தில் சாதரண மனிதராக டிக்கெட் கலெக்டர் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். அஸ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை எஸ்.பி. சினிகார்ப் புரொடைக்‌ஷன் தயாரித்துள்ளது. ஜியோ ஸ்டூடியோ வழங்குகிறது.

இப்படம் குறித்து பேசிய மாதவன், “இந்தப் படம் ஊழலுக்கு எதிரான போராட்டம் மட்டும் அல்ல. நீதி என்பது எளிதாக கிடைத்து விடாது என்பதையும் புரிந்து கொள்ள வைக்கும் படம். தார்மீக பொறுப்புணர்வை பற்றி பேசும் இந்தப் படத்தை இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் பார்க்கவிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.

Advertisment
Advertisment