Advertisment

சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிபரப்பாகும் மாதவன் படம்

Madhavan film to screen at canness Film Festival

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் மாதவன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு'. இந்த படம் இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரமான நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு வெளியாகி பலரின் கவனத்தை பெற்றது. மேலும் துபாயில் நடைபெற்ற 'துபாய் எக்ஸோ 2022'-ல் இப்படத்தின் ட்ரைலர் ஒளிபரப்பு செய்யப்பட்ட போது பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

Advertisment

இந்நிலையில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படம் 'கேன்ஸ் திரைப்பட விழா 2022-ல்' திரையிடப்படவுள்ளது. உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் மே மாதம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பதினொரு நாள் நடைபெறும் இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்த விழாவில் மாதவனின் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படமும் திரையிடப்படவுள்ளது. இப்படம் ஜூலை 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் உலக அளவில்வெளியாகிறது.

Advertisment

இதனிடையே கமல்ஹாசன் நடித்து ஜூன் 3-ஆம் தேதி வெளிவரவுள்ள 'விக்ரம்' படத்தின் ட்ரைலரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிபரப்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Madhavan Rocketry The Nambi Effect
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe