/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/140_26.jpg)
தமிழ் மற்றும் இந்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் மாதவன், 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படத்தை தொடர்ந்து இந்தியில் 'தோகா' படத்தில் நடித்திருந்தார். தமிழில் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மீடியாஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில், மாதவன்அடுத்ததாக தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைத்தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஜி.டி.நாயுடு படைத்த சாதனைகளை பற்றி பேசவுள்ள இப்படத்திற்காக ஜி.டி.நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுடன்மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புடன் படக்குழு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)