Advertisment

‘கூலி’ படத்துடன் பிரத்யேகமாக வெளியிடப்படும் சிவகார்த்திகேயன் பட கிளிம்ப்ஸ்

86

இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கூலி’ படம் வருகின்ற 14ஆம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் டாப் நடிகர்களான நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், இவர்களோடு சிறப்பு வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பலரும் நடித்துள்ளனர். இதனால் படத்திற்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரம்மாண்ட ஓபனிங் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ரஜினி, திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகளை கடக்கும் நிலையில் அதனை கொண்டாட காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் வெளியாகவுள்ளதால் டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. 

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் கடந்த சில வாரங்களாக புரொமோஷன் பணிகளால் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களிலே முதல் நாளுக்கான பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகி விட்டது. முன்பதிவிலே ரூ.14 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் படத்தின் வசூல் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையும் இந்த எதிர்பார்ப்பிற்குப் பக்கபலமாக அமைந்தது. இவர் இசையில் வெளியான ‘சிக்கிடு வைப்’, ‘மோனிகா’ மற்றும் ‘பவர்ஹவுஸ்’ பாடல்கள் உள்ளிட்ட அனைத்துமே பெரும் வரவேற்பை பெற்றது. படம் வெளியாவதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Advertisment

இப்படம் நாளை சிறப்பு காட்சியுடன் பிரம்மாண்டமாக வெளியாகிறது. காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் முதல் காட்சி ஆரம்பிக்கிறது. இதனை வரவேற்க ரசிகர்கள் தயாராகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இப்படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தின் கூடுதல் கிளிம்ப்ஸ் பிரத்தியேகமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மதராஸி படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருக்க வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று முன் தினமான 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதல் கிளிம்ப்ஸ் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.     

Madharasi Actor Rajinikanth Coolie actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe