சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. பின்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இப்படம் தமிழ். மலையாளம், தெலுங்கு உட்பட மொத்தம் ஐந்து மொழிகளில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆடியோ உரிமையை ஜங்க்லீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான ‘சலம்பல’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி வைரலானது. இப்பாடலை இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பாடியுள்ளார். சூப்பர் சுபு எழுதியுள்ளார். காதல் தோல்வியை மையப்படுத்தி இப்பாடல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ‘செலவிகா’ இந்தியில் ‘தடபா’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. தெலுங்கில் தனுஞ்சய் சீபனா பாடியுள்ளார். ஸ்ரீனிவாச மௌலி எழுதியுள்ளார். இது தொடர்பாக புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Set your speakers to full volume 💥💥#Madharaasi / #DilMadharaasi first single out today at 6 PM 🎼#Salambala 🤙🏻 (Tamil)#Selavika 🤙🏻 (Telugu)#Tadapaa 🤙🏻 (Hindi)
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) July 31, 2025
An @anirudhofficial banger 🥁@SaiAbhyankkar#DhanunjaySeepana#SuperSubu#SrinivasaMouli#RiteshGRao#SKxARM… pic.twitter.com/zldX4XgBPl