சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் குறைவான எதிர்பார்ப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. இப்படத்தை ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரித்திருக்க சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் வில்லனாகவும் பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இவரது இசையில் வெளியான ‘சலம்பல’ பாடல் ஹிட்டடித்தது.  

Advertisment

சமீபகாலமாக பின்தங்கிய நிலையில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படம் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது முழுதாக நிறைவேறவில்லை. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. நேற்று முதல் நாள் முதல் காட்சியை ரசிகரக்ளுடன் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினரும் அஜித்தின் மனைவி ஷாலினி உள்ளிட்ட சில திரை பிரலங்களும் கண்டு கழித்தனர்.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 12.8 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான அமரன் படம் ரூ.16.5 கோடி முதல் நாளில் தமிழகத்தில் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.