சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். 

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. பின்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இப்படம் தமிழ். மலையாளம், தெலுங்கு உட்பட மொத்தம் ஐந்து மொழிகளில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆடியோ உரிமையை ஜங்க்லீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘சலம்பல’ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. தொடார்ந்து புரொமோஷன் பணிகளில் ஏ.ஆர்.முருகதாஸ் பல நேர்காணல்களை கொடுத்து வருகிறார்.  

Advertisment

படத்தின் இசை வெளியீடு குறித்து சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளதாகவும் இதிலே படத்தின் ட்ரெய்லரையும் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டது. இது தற்போது உறுதியாகியுள்ளது. படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வருகின்ற 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் எந்த இடம் குறித்த தகவலை படக்குழுவினர் வெளியிடவில்லை. மிக விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகன் பேச்சு ஹைலைட்டாக இருக்கும். அதை கேட்க அவர்களது ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போது ஆர்வமாக இருக்கிறார்கள். 

Advertisment