வழிப்பறியில் ஈடுபடும் நிவின் பாலி, மோகன்லால்... மதன் கார்க்கி பேச்சு  

mr.chandramouli

madhan karky

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

படங்களுக்கு பாடல் வரிகள் மற்றும் 'பாகுபலி', 'பாகுபலி 2', 'நடிகையர் திலகம்' போன்ற படங்களுக்கு தமிழ் வசனங்களும் எழுதிவரும் பாடலாசிரியர் மதன் கார்க்கி தற்போது நிவின் பாலி நடித்துள்ள 'காயம்குளம் கொச்சுண்ணி'படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு வசனம் எழுதியுள்ளார். ஜோதிகாவின் ‘36 வயதினிலே’ படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியிருக்கும் இப்படம் 1800ம் ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்து, இல்லாதவர்களிடம் கொடுக்கும் ராபின் உட் கதை பாணியில் உருவாகும் இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து மதன் கார்க்கி பேசும்போது... "இந்தப் படம் பண்டைக்கால பின்னணியில் அமைந்திருந்தாலும், மையக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதன். எனவே, தனித்துவமாக இதை கையாள முடிவு செய்தோம். மேலும் இது மிகவும் பழையதாகவோ அல்லது முற்றிலும் சமகாலத்திலோ இல்லை. தமிழ் ரசிகர்கள் மொழிமாற்றுப் படத்தைப் பார்க்கிறோம் என்று நினைக்காமல் இருக்க வைக்கும் பெரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது" என்றார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

kaayamkulamkochunni
இதையும் படியுங்கள்
Subscribe