'வாழ்க்கை ஒரு சூதாட்டம்' - போஸ்டரை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

Madhampatty Rangaraj, vani bhojan movie 'casino' first look released by vignesh shivan

2019-ஆம் ஆண்டுசரவணாராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான 'மெஹந்திசர்க்கஸ்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்மாதம்பட்டிரங்கராஜ்.சினிமாவில்நடிப்பது மட்டுமில்லாமல் சமையல் கலைஞராகவும் பயணிக்கிறார். 'மெஹந்திசர்க்கஸ்'படத்தைதொடர்ந்து கீர்த்திசுரேஷின்'பென்குயின்' படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து தற்போது 'மாதம்பட்டிசினிமாஸ்' தயாரிக்கும் 'கேசினோ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக வாணிபோஜன்நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ரமேஷ்திலக்உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர்.மார்க்ஜோயல்என்பவர் இப்படத்தை எழுதி, இயக்கி,படத்தொகுப்புபணிகளை மேற்கொள்கிறார். தினேஷ் நாகராஜன் மற்றும் ஸ்டான்லி சேவியர்இசைமைக்கின்றனர்.

இந்நிலையில் 'கேசினோ' படத்தின்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டர்வெளியாகியுள்ளது இதனை இயக்குநர்விக்னேஷ்சிவன் தனதுட்விட்டர்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.கார்ட்டூன்வடிவில் வித்தியாசமாக வெளியாகியுள்ள இந்தபோஸ்டரில்'வாழ்க்கை ஒரு சூதாட்டம்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் விரைவில் இப்படம் வெளியாகும்எனபடக்குழு தெரிவித்துள்ளது.

vani bhojan vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe