
2019-ஆம் ஆண்டு சரவணா ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் சமையல் கலைஞராகவும் பயணிக்கிறார். 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் 'பென்குயின்' படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து தற்போது 'மாதம்பட்டி சினிமாஸ்' தயாரிக்கும் 'கேசினோ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ரமேஷ் திலக் உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். மார்க் ஜோயல் என்பவர் இப்படத்தை எழுதி, இயக்கி, படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். தினேஷ் நாகராஜன் மற்றும் ஸ்டான்லி சேவியர் இசைமைக்கின்றனர்.
இந்நிலையில் 'கேசினோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கார்ட்டூன் வடிவில் வித்தியாசமாக வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் 'வாழ்க்கை ஒரு சூதாட்டம்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் விரைவில் இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Happy to launch the first look of #Casino
Starring @Madhampatty @vanibhojanoffl @RameshThilak53 @Johnroshan
Written Edited & Directed by @markjoel_r #CasinoTheMovie@actorchella @VigneshJK6 @iamdhinesh @Stanley_Xavi @deepakbhojraj pic.twitter.com/gigZUq941S— Vignesh Shivan (@VigneshShivN) July 5, 2022