பிரபல சமையல் நிபுணர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஜாய் கிரிசில்டாவுக்கும் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இதில் ஜாய் கிரிசில்டா தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக கடந்த மாதம், காவல் ஆணையரகத்தில் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இதையடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் வீடியோக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு அவரை குற்றம் சாட்டி வந்தார். அப்போது மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஜாய் கிரிசில்டாவிற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் ‘நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட விவகாரத்தில் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தொடர்ப்பு படுத்தி பேசக்கூடாது, அவரின் செயலால் எஙள் நிறுவனத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதோடு வணிகரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் எங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேசுவதற்கு ஜாய் கிரிசில்டாவிற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்த மனு இன்று நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாய் சிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் எங்களது நிறுவனத்தை தொடர்பு படுத்தி பேசியதால் கடந்த 15 நாட்களில் 12 கோடியே 5 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும் ஜாய் கிரிசில்டா, ஓய்வுபெற்ற நீதிபதி முன்பு மத்தியஸ்த பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜாய் கிரிசில்டா தரப்பு ‘மாதம்பட்டி என்று குறிப்பிடாமல் வெறும் ரங்கராஜ் என்று குறிப்பிட்டால் யாருக்கும் தெரியாது. அதனால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று வாதிட்டது. இதையடுத்து ரூ.15.5 கோடி இழப்பீடு தொடர்பாக ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பிற்கு நீதிபதி உத்தரவிட்டு வரும் 24ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். 

இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ், தனிப்பட்ட முறையில் ஜாய் சிரிசில்டா மீது இன்னொரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ஜாய் கிரிசில்டா அவதூறு கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கையும் அந்த வழக்கோடு இணைத்து வரும் 24ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.