Advertisment

'மாயவா தூயவா' ஸ்ரேயா கோஷல் குரலில் வெளியான பார்த்திபன் பட பாடல்

 'Maayava Thooyava' is a Parthiban film song sung by Shreya Ghoshal

பார்த்திபன், தமிழில் சமீபகாலமாக புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உலகிலேயே நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள முதல் திரைப்படம் ஆகும். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை 'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'இரவின் நிழல்' படத்தில் இடம்பெற்றுள்ள 'மாயவா தூயவா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்ரேயா கோஷல் குரலில் வெளிவந்திருக்கும் இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார். பார்த்திபன் கதாபாத்திரத்தின் மீது கதாநாயகி வைத்திருக்கும் காதலை விவரிக்கும் வகையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

iravin nizhal madhan karky ar rahman ACTOR PARTHIBAN
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe