maayan movie update

Advertisment

ஜெ.ராஜேஷ் கன்னா இயக்கத்தில் ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் மாயன். இந்த படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆங்கில பதிப்பில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர்கள் தவிர பியா பாஜ்பாய், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்துள்ளார்.

இப்படம் நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் திரையுலகில் உருவாக்கப்பட்டதிலேயே அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இப்படம் இருப்பதாகச் சொல்கிறார்கள். 2 பதிப்புகளாக மாயன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.