/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/94_39.jpg)
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் முதல் பாடலான ‘ஸீனா ஸீனா’ லிரிக் வீடியோ ஆகியவை முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் திடீரென்று ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளது படக்குழு. அதன்படி வருகிற ஜூலை 14 ஆம் தேதி வெளியாகும் என புது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் ரஜினியின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என நேற்று அறிவிப்பு வந்துள்ளதால் இரண்டு படமும் ஒரே சமயத்தில் வெளியானால் வசூல் பாதிக்கும் எனக் கருதி இப்படத்தை முன்கூட்டியே வெளியிட மாவீரன் படக்குழு முடிவு செய்துள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)